Sunday, August 8, 2010

நட்பு

அன்பை கொடுக்கும் நட்பு!
ஆழமான பிரிவை கொடுக்கும் நட்பு!
இன்பத்தை கொடுக்கும் நட்பு!
ஈன்ற குழந்தை போல பிறக்கும் நட்பு!
உயிரையே  கொடுக்கும் நட்பு!
ஊரையே இணைக்கும் நட்பு!
எளிமையான நண்பரை கொடுக்கும் நட்பு!
ஏணிபோல ஏற்றதை தரும் நட்பு!
ஐயேமே  போற்றும் நட்பு!
ஒற்றுமையாய் வாழும் நட்பு !
ஓவியம் போல் மறையாத நட்பு !
ஒளவை பழம் போல் உலகம் எது என வெற்றியை தரும் நட்பு !
                     நட்பு ஒருமுறை மலர்ந்தாலும்!
 அது இறப்பதில்லை ;        பல நட்புகள் மீண்டும் பிறக்கும்.




 




    

Saturday, August 7, 2010

தாய்

பத்து மாதங்கள் சுமந்து என்னை
மண்ணில் ஈன்றவள் நீ  ! 
உன் உயிரை பணயமாக்கி
என் உயிரை கொடுத்தவள் நீ !
தட்டு தடுமாறி நடந்த என்னை
தொட்டு நடக்கவைதவள் நீ !
திக்கி தடுமாறி பேசிய என்னை
தூக்கி, அம்மா என்ற சொல்லை
அறிமுக படுதியவலும் நீ !
அரை நிலவாக இருந்த என்னை
முழு நிலவாக வடிவமைதவள் நீ !
அன்புக்கு தாய்யாகி 
அறிவுக்கு சேயாகி இருப்பவள் நீ !
நான் எதிர் பார்ப்பது என்றென்றும்
உன் தாய் அன்பு மட்டுமே .

Friday, August 6, 2010

வெற்றிப்பாதைகள்

இலட்சியத்தோடு போராடுங்கள் !
பகையோடு நட்புகொள்ளுங்கள் !
பொறுமையோடு பெருமை சேருங்கள்!
இருப்பதை வைத்து வருவதை சேமியுங்கள் !
பொய் என்ற சொல்லை நீக்கி உண்மையாக
வாழ கற்றுக்கொள்ளுங்கள் !
தாய் என்ற சிகரத்தை ஒளிசுடராக வணங்குங்கள்! 
வீழுகின்ற பொழுதெல்லாம் எழுவதுதான் வெற்றி !
நேர்மையாக இருந்தால் வெற்றி பாதைகளும் உங்கள் பக்கம் .
                                                  
                                   இது எனது முதல் பதிவு .